காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பரீனாஸ் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் தாழ்வாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது பற்றிய முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 05.05.2018 அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த எரிப்புச் சம்பவத்தினால் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன முற்றாக எரிந்துள்ளதோடு வீட்டின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளன.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர், தனது குடும்பத்தினரோடு மேற்படி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றார்.
குரோதம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment