21 May 2018

பரசுராம பூமி நூல் வெளியீட்டு

SHARE
பதிப்பாசிரியரும் ஊடகவியலாளருமான மகுடம் வி. மைக்கல்கொலின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 20.05.2015 மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வின் 33 ஆவது தொடராக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ. நவரட்ணம் நவாஜி அடிகளார் தலைமை வகித்தார்.
இந்நிகழவின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா. உதயகுமார் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முதல் பிரிதியை தமிழ்ச் சங்கத் தலைவர் வி. ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.

கவிஞர் அ.ச.பாய்வாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை சிரேஷ்ட உதவிச் செயலாளரும் சமூக ஆய்வு எழுத்தாளருமான வி.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் மு.கணேசராஜா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தொன்மங்களையும், மறை நூல்களையும் மீட்டிப் பார்க்கும் பாரதத்தின் இரு கதைகள், இராமாயணம் மற்றும் வேதாகமத்தில் தலா 3 தொகுப்புகளையும், தமிழ் தேசிய அரசியல் மற்றும் ஞானம் என்பவற்றை உள்ளடக்கிய பஞ்ச முகங்கள் கொண்ட பரசுராம பூமி 9 கதைகள் கொண்ட தொகுப்பாக உள்ளதாக தமிழர் தளம் இணை ஆசிரியர் ச. மணிசேகரன் நூல் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போது  தெரிவித்தார்.

இத்தொகுப்பில் குருசேத்திரம் அரசியல் ரீதியாகவும், பரசுராம பூமி முள்ளி வாய்க்கால் பற்றியும், ஓர்மம் ஊர்நிலை பற்றி பெண்கள் பேசும் பெண்களின் கதைகளும், பலம் மற்றும் இராவநாசம் என்பன தொகுக்கப்பட்ட அரமாக அடங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: