2 Apr 2018

ரெனிஸ் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த ரெனிஸ் வீரர்கள் இரண்ட்டையர் பிரிவிலும், ஒற்றையர் பிரிவிலும் வெற்றி.

SHARE
இலங்கை ரெனிஷஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாவருடம் நடைபெறும் தேசிய களிமண் தரை ரெனிஸ் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த ரெனிஸ் வீரர்கள் இரண்ட்டையர் பிரிவிலும், ஒற்றையர் பிரிவிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
கொழும்பு ரெனிஸ் சங்கத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்ற இப் போட்டியில் கொழும்பு சென் பீற்றர்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான தினேஸ்காந் தங்கராஜா, சஞ்சீவ் மோகனகுமார் ஆகியோர் இரட்டையர் பிரிவில்  6க்கு 3 , 6 க்கு 2 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றுனர். 

அதே நேரம், ஒற்றையர் பிரிவில், தினேஸ்காந் தங்கராஜா, 7
க்கு 6, 6க்கு 3 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முதல் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் 16 யோடிகளும், ஒற்றையர் பிரிவில் 64 பேரும் பங்குபற்றியிருந்தனர். 

எதிர்வரும் 25ஆம் திகதி இதற்கான பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: