மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்புறக் கிராமத்தில் அதிகஸ்ட்டப் பாடசாலையாகக் காணப்படும் மட்.பட்.மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இம்முறை கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 30 மாணவர்களில் 13 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் க.சந்திரகுமார் தெரிவித்தார்.
போக்குவரத்து வசதிகளற்ற நிலையில் பகுதிநேர வகுப்புக்கள் எதுவுமின்றி பாசாலைக் கல்வியை மாத்திரம் பெற்று இம்மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர் இதில் வேதநாயகம் வுசா என்ற மாணவி 2ஏ, 4பீ, 3எஸ், சித்திகளைப் பெற்று 9 பாடங்களிலும் சித்தியெய்து அப்பாடசாலைக்கும் கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்கள், உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், மற்றும் ஊக்கமழித்த கல்விச் சமூகம், எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தும் வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளவதாக மேற்படி பாடசாலையின் அதிபர் க.சந்திரகுமார் தெரிவித்தார்;.
0 Comments:
Post a Comment