3 Apr 2018

மட்டு. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமானது

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று உள்ளுராட்சி மன்றத்தின் அங்குரார்ப்பணம் செவ்வாய்க் கிழமை (03) பிரதேச சபையின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஞா.யோகநாதனும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த த.தவறாணியும் போட்டியிட்டனர். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஞா.யோகநாதனுக்கு  ஆதரவாக 11 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் த.தவறாணிக்கு ஆதரவாக 6 வாக்குகளும், பெற்றதோடு,  இதில் 4 பேர்  வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையும் வகித்தனர். பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஞா.யோகநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

உபதவிசாளருக்கும் தமிழ் தேசயக்கூட்டமை;பபின் க.றஞ்சினியும், ஐக்கிய தேசிக் கட்சியின் த.தவறாணியும் போட்டியிட்டனர். பின்னர் இதற்கும் திறந்த வாக்கெடுப்பின் மூலம் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் க.றஞ்சினிக்கு ஆதரவாக 11 வாக்குகளும், ஐக்கிய தேசிக் கட்சியின் த.தவறாணிக்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டடு 6 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர். 

பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்  உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைபபின்  கனகராசா றஞ்சினி தெரிவு செய்யபட்டார்.
இறுதியில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு சபை அமர் நிறைவுற்றது.










SHARE

Author: verified_user

0 Comments: