மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி கடற்கரையை அண்டிய பகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதானால் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோறாஜூக்கு அப்பகுதி மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப உரிய இடத்திற்கு புதன் கிழமை (11) உடன் நேரில் சென்று பார்வையிட்டு கழிவுகை அவ்விடத்திலே ஜே.சி.பி. இயந்திரத்தினால் புதைத்து துப்பரவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது குப்பைமேடு இயந்திரத்தினால் பரவி அதன்மேல் மண் இட்டு புதைத்து முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.
குறித்த இடத்தில் இன்றிலிருந்த பிரதேச சபையால் எதுவித கழிவுகளும் கொட்டப்படமாட்டாது எனவும், பொதுமக்களும் உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள், என்பவற்றை வெவ்வேறாக பிரித்து வைத்தால் அவற்றை பிரதேச சபையால் அகற்றுவதற்கு இலகுவாக அமையும் என பிரதேச சபை உறுப்பினர் மே.வினோறாஜ் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment