புறக்கணிப்பட்டுள்ள அதேவேளை, எதிர்பார்ப்போடு உள்ள மட்டக்களப்பு விவசாயிகளுக்கு உடனடியாக உரமானியம் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்கசளப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் புறக்கணிப்புக்கள் குறித்து அந்த விடயம் தொடர்பாக தான் விவசாய அமைச்சர் மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 01.04.2018 கருத்துத் தெரிவித்த முன்னாள் முதலமைச்சர், கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உர மானியத் திட்டத்தின் நன்மைகள் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது குறித்து கவனமெடுக்குமாறு பிரதமரைக் கேட்டுள்ளேன்.
கடந்த 30 வருட கால யுத்தத்தினால் அழிவைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் விவசாயிகள் நாட்டுக்கு பெரும் அர்ப்பணிப்போடு தமது விவசாய உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆயினும், அவர்களது இந்த அர்ப்பணிப்பும் வாழ்வாதார நிலைமையும் உரியவர்களின் உரிய கவனத்தை இன்னும் பெறாமல் புறக்கணிப்பாக உள்ளது பெரும் அநீதியாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் சுமார் 61,280 ஏக்கர் நெற் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன சிறுபோகச் செய்கையில் ஈடுபடும் எந்தவொரு விவசாயிக்கும் இதுவரை உரமானியம் வழங்கப்படாதது குறித்து விவசாயிகள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார்கள்.
விதைப்பு இடம்பெறுவதற்கு முன்னதாகவே உரிய வேளையில் இந்த உர மானியம் விவசாயிகளுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் விதைப்பு இடம்பெறு தற்போது 20 நாட்களைக் கடந்து விட்ட நிலையிலும் உர மானியம் மட்டக்களப்பு விவசாயிகளைச் சென்றடையவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அறுவடையிலும் அரசு உரிய கவனமெடுத்து விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு நன்மையளிப்பதில்லை.
உரமானியமாயினும், நெல்கொள்வனவாயினும், வற(ர)ட்சி அல்லது வெள்ளம் போன்ற நிலைமைகளின் பாதிப்பாயினும் சரி அது பெரும்பான்மை விவசாயிகளுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களைச் சார்ந்தே மேற்கொள்ளப்படுகின்றது.
இது உண்மையில் மாற்றாந்தாய் மனப்பான்மையும் திட்டமிட்ட புறக்கணிப்புமாகும்.
மட்டக்களப்பு விவசாயிகளின் நெற்செய்கைக் காலம், நீர்ப்பாசனம், அறுவடை என்பன அருகிலுள்ள பொலொன்னறுவை அல்லது அம்பாறை விவசாயிகளின் நிகழ்ச்சி நிரலில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதால் மட்டக்களப்பு விவசாயிகளுக்கான தீர்மானங்களை பெரும்பான்மையின விவசாயிகளிகளுக்கான தீர்மானங்களோடு இணைத்து பார்க்கப்படக் கூடாது.
இவ்வாறு பார்க்கப்படுவதே மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிகச்கப்படுவதற்கான பிரதான காரணமாகும் என்றார்.
0 Comments:
Post a Comment