மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட பாராட்டும், பரிசழிப்பு விகழ்வும் களுதாவளை கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (31) இரவு நடைபெற்றது.
மட்.களுதவாளை மகாவித்தியாலய அதிபர் பே.காப்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போராசிரியர் வி.குணரெட்ணம், கலாநிதிகளான எஸ்.ஜெயராஜா, ஜி.தில்லைநாதன், எஸ்.சீவரெட்ணம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, மற்றும் ஆலயங்களின் நிருவகத்தினர், பொது அமைப்புக்ளின் பிரதிநிதிகள், அதிகர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயராஜா, ஜி.தில்லைநாதன், எஸ்.சீவரெட்ணம் ஆகிய மூன்று பேரும் கலநிதிப் பட்டங்களையும், வி.குணரெட்ணம் பேரசிரியராகவும் பட்டம் பெற்று கிராமத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த நான்கு பேருக்கும், பழைய மாணவர் சங்கத்தினரால் இதன்போது பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும் களுவளையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் கடந்தவருடம் விளையாட்டு, உள்ளிட்ட இணைபாட விதானங்களிலும், மாவட்டமட்டம், மாணமட்டம், தேசியமட்டத்திலும் சாதனை படைத்த மாணவர்கள் அனைவரும் இதன்போது பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment