6 Apr 2018

மட்டக்களப்பு மாநகரின் 14 வது மேயராக சரவணபவன் தெரிவானார்.

SHARE
மட்டக்களப்பு மாநகர சபைக்கு மேயர் மற்றும் பிரதி மேயரைத் தெரிவு செய்யும் சபையின் முதலாவது அமர்வு வியாழக் கிழ (05) நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தி.சரவணபவான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேயர் தெரிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தி.சரவணபவனும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எஸ்.சோமசுந்தரம் ஆகிய இருவரின் பெயர்களும் பிரேரிக்கப்பட்டன.  இதில் சரவண பவனுக்கு ஆதரவாக 25 வாக்குகளும், சோமசுந்தரத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக தி.சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீம் சபைக்கு அறிவித்தார்.

தி.சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபையின் 14 வது மேயராவார்.

தொடர்ந்து பிரதி மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் க.சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவின்படி மட்டக்களப்பு மாநகர சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 17 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனமும், ஐக்கிய தேசியக் கட்சிக் 4 ஆசனங்களையும்,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 5 ஆசனங்களையும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி 4 ஆசனங்களையும்,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 4 ஆசனங்களையும்,  சுயேட்சைக்குழு ஒன்று, சுயேட்சைக்குழு இரண்டு, மற்றும் சுயேட்சைக்குழு நான்கு, ஆகியன  தலா ஒவ்வாரு ஆசனத்தையும் கைப்பற்றி மொத்தம் 38 உறுப்பினர்களை மட்டக்களப்பு மாநகரசபை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: