8 Mar 2018

முகநூல் சேவை, முழு அளவில் முடக்கம்

SHARE
புதன்கிழமை (07) நண்பகலுக்குப் பின்னர்  முகநூல் சேவைகளும் அலைபேசிகளினூடான இணைய சேவைகளும் முழு அளவில் முடக்கப்பட்டிருப்பதாக அதன் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு புதன்கிழமை காலை முதல் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் தற்போது முகநூல் சேவைகளும் கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன.

மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகங்கள், குழுக்களுக்கிடையில் கலகத்திற்கு தூபமிடும் வகையில் முகநூல்களினூடாகவும் இன்ன பிற அலைபேசியூடான இணைய சேவைகளுக்கூடாகவும் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் இத்தகைய தடை கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகவாழ்வையும் இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் இத்தகைய முகநூல் மற்றும் அலைபேசியூடான இணைய சேவைகளை முடக்குவது சிறந்தது என்ற போதிலும் அரசாங்கம் அத்துடன் நின்றுவிடாது வதந்திகள் பரப்புவோருக்கெதிராகவும் கலகத்தைத் தூண்டுவோருக்கெதிராகவும் சட்டம் ஒழுங்கின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: