மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று முதல் நான்கு வரையிலான ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் கல்விக்கண்காட்சி அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்றது. மாணவர்களின் திறன்களை விருத்தி செய்து சவால்மிக்க இலத்திரனியல் தொழிநுட்ப உலகிற்கு ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் மாணவர்களின் திறன்கள் சம்பந்தமான 1000 மேற்பட்ட கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம், ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி.பூபாலசிங்கம், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளரும், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளருமான எந்திரி வை.கோபிநாத், பாடசாலையின் பழைய மாணவசங்கத்தின் தலைவர் எஸ்.சசிதரன் , பிரதி இராசதுரை பாஸ்கர், உப அதிபர்களான எஸ்.லோகராசா,எஸ்.சதீஸ்வரன்,ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் திருமதி. வனஜா வாலநாயகம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கண்காட்சியை வலயக்கல்வி பணிப்பாளரும், அதிபரும் இணைந்து இக்கண்காட்சியை நாடாவெட்டி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள். இதன்போது அதிதிகள் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கல்விக்கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற்றார்கள்.25 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment