2 Mar 2018

தேனீ வளர்பினூடாக காட்டு யானைகளைத் தடுக்கும் செயற்பாடு வெற்றி

SHARE
காட்டுயானைகள் கிராமத்தினுள் வராமல் இடப்பட்டுள்ள தேனீ வளர்ப்புச் செயற்பாட்டினால் அப்பகுதியூடாக கிராமத்தினுள் உட்புக வந்த காட்டு யானை திரும்பிச் சென்றுள்ளது என ஆனைகட்டியவெளி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் போரதீவுப்பறுப் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி எனும் கிராமத்தினுள் வரும் காட்டு யானைகளைத் தடுப்பதற்காக வேண்டி பிரதானமாக காட்டு யானைகள் வரும் 500 மீற்றர் இடைவெளிக்குள் 20 தேன்கூட்டுப் பெட்டிகளை இட்டு பரீட்சாத்தமாக செய்யப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டம் இலங்கையில் முதன்முறையாக இக்கிராமத்தில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தேனிவளர்ப்பதனூடாக தேனிக்களிடமிருந்து வரும் ஒருவித இசைச்சல் யானைகளின் காதுக்ளுக்குப் பொருந்தாது எனவும், மற்றும் தேனீக்கள் யானைகளுக்குத் தாக்குவதனாலும், கிராமத்தினுள் வரும் காட்டு யானைகளைத் தடுக்கலாம் என்ற வகையில் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள போதிலும் வியாழக்கிழமை (01) இச் செயற்பாட்டின் முன்னேற்றங்கள் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் ஆனையட்டிகவெளிக் கிராமத்திற்குச் சென்று அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை (28) இரவு குறித்த தேனீப்பெட்டிக்கள் அமையப்பெற்றுள்ள இடத்தினால் யானை ஒன்று வந்துள்ள போதிலும் அவற்றால் தேனிப்பெட்டிக்களைக் கடந்து கிராமத்திளுன் உட்புக முடியாமல் மீண்டும் திரும்பிச் சென்று பிறிதொரு வழியினால் அந்த யானை கிராமத்தின் ஓர் எல்லைக்கு வந்து அங்கிருந்த தென்னை மற்றும் வாழைகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனவே எமது கிராமத்திற்கு காட்டு யானைகள் உள்வராமலிருக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் குறிப்பிட்ட 500 மீற்றர் தூரத்திற்கு இடப்பட்டுள்ள பகுதியினால் காட்டு யானைகள் வரவில்லை அவர்களது இச்செயற்றிட்டம் வெற்றியளித்துள்ளது. அனால் ஏனைய பகுதிகளுடாக எங்கள் கிராமத்திற்கு யானைகள் வருகின்றன. ஆகவே எமது கிராமத்தைச் சுற்றி இவ்வாறு தேன் கூடுகளை அமைத்துத்தருமாறும், யானைத்தாக்கம்பற்றி எம்மை யாரும் கவனிக்காத நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் எம்மீது அக்கறை கொண்டு இதனை முன்நெடுத்ததைகு எமது நன்றிகளையும் தொரிவித்துக் கொள்வதாக ஆனையட்டியவெளி கிராம மக்கள் தெரிவித்தனர்.  









SHARE

Author: verified_user

0 Comments: