மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச கலாசார மத்திய நிலையமும் ஞாயிற்றுக் கிழமை (11) வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மத்திய நிலையத்தின் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசிவருகின்ற இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு அப்பகுதியை ஊடறுத்த வீசிய பலத்த சுழல் காற்றினால் இந்த கலாசார மத்திய நிலையத்தின் கூரையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டலுவர்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்த கலாசார மத்திய நிலையத்தில் நடனம், சங்கீதம், போன்ற பல வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment