12 Mar 2018

சுழல் காற்றினால் பிரதேச சபையின் களஞ்சிய அறையின் கூரை முற்றாக சேதம் சேதம்.

SHARE
ஞாயிற்றுக் கிழமை (11) இரவு வீசிய பலத்த சுழல் காற்றினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் கழஞ்சிய அறையின் கூரை முற்றாகச் சேதடைந்துள்ளதாக போரதீவப் பற்றுப் பிரதேச சபை நிருவாகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை இரவு முழுவதும் இப்பகுதியில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசியது. இதனால் பல இடங்ககளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் சுழல் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் மேற்படி பிரதே சபையின் களஞ்சிய அறையின் கூரை முற்றாக உடைந்து சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றால் சுமார் 75000 ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபையின் நிருவாகம் தெரிவித்துள்ளது. 

பாதிப்பின் நிலமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் திங்கட் கிழமை நேரில் சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளார்.








SHARE

Author: verified_user

0 Comments: