14 Mar 2018

போரதீவுப்பற்றுப் பிரதேச சபைககுத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் மண்டபம் தயார்.

SHARE
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தமது ஒன்றுகூடல்களை நடாத்துவதற்குரிய மண்டபம் தயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் செயலாளர் அ.ஆதித்தன் தெரிவித்தார்.
போரதீவுப்பற்றுப் பிரதேச உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்  இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிய, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், உள்ளிட்ட அரசியல் கடசிகளும், 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 9 அணியினர் போட்டியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இப்பிரதேசத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 7904 வாக்குகளைப் பெற்று 8 அங்கத்தவர்களையும்,  ஐக்கிய தேசியக் கட்சிய 3157 வாக்குகளைப் பெற்று 3 அங்கத்தவர்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 2584 வாக்குகளைப் பெற்று 2 அங்கத்தவர்களையும், இரண்டாம் இலக்க சுயேட்சைக்குழு 1813 வாக்குகளைப் பெற்று 2 அங்கத்தவர்களையும்,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 1717 வாக்குகளைப் பெற்று 1 அங்கத்தவரையும், முதலாம் இலங்க சுயேட்சைக்குழு 1391 வாக்குகளைப்பெற்று 1 அங்கத்தவரையும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி 1608 வாக்குகளைப் பெற்று 1 அங்கத்தவரையும் பெற்றுள்ளனர்.

எனவே இம்முறை போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்கு 18 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்களின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 20 ஆம்திகதி நடைபெறலாம் என பரவலாக பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: