முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கண்டிக்கும் முகமாக காத்தான்குடி பிரதான வீதியில் டயரைப் போட்டு எரித்த நபரைத் தாம் கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இயல்பு நிலையைக் குலைத்து வன்முறைகளைத் தூண்ட முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment