11 Feb 2018

பட்டிருப்பு தொகுதியில் த.தே.கூ. அதிக வட்டாரங்களை வென்றுள்ளது.

SHARE
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின் படி பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்களிலும் அதிகளவான வட்டாரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் அமைந்துள்ள 11 வட்டாரங்களிலிருந்து 12 பேர் தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் (இவற்றுள்  ஒரு வட்டாரம் இரட்டை அங்கத்தவர் தெரிவு) 10 அங்கத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய ஒரு வட்டாரத்தை தமிழ் விடுதலை ஐக்கிய முன்னணியும், மற்றய வட்டாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளது.

இத்தொகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் கீழ் 10 வட்டாரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் 8 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மற்றய 2 வட்டாரங்களில் ஒன்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், மற்றயதை சுயேட்சைக்குழுவும் கைப்பற்றியுள்ளது.

பட்டிருப்பும் தேர்தல் தொகுதியிலுள்ள மண்முனை தென் மேற்கு பிரதேச சபையிலுள்ள 10 வட்டாரங்களில் 5 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 3 வட்டாரங்ளை தமிழ் விடுதலை ஐக்கிய முன்னணியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு வட்டாரத்தையும், குயேட்சைக் குழு ஒரு வட்டாரத்தையும் கைப்பற்றியுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: