வாழ்வின் இறுதிக்காலத்தில் அநேகரால்; ஒதுக்கப்படுகின்ற ஒரு சமூகம் முதியோர் சமூகம். அச்சமூகத்தை அநேகர் ஒருபொருட்டாகவே கருதுவதில்லை. சொந்தப் பிள்ளைகள்கூட அவர்களை பாரமாக நினைக்கின்றார்கள்.
இலங்கைசெஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புமாவட்டக் கிளைத் தலைவரும் அஹிம்சாசமூகநிறுவனத்தின் ஆலோசகருமானத.வசந்தராஜா தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள பலாச்சோலைக் கிராமத்தைச் சோர்ந்த 40 முதியவர்களுக்கு மட்டக்களப்பு இலங்கைசெஞ்சிலுவைச் சங்ககேட்போர்கூடத்தில் வைத்து அஹிம்சா எனும் சமூக நிறுவனம் திங்கட் கிழமை (19) போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.
இதன்போது கலந்து கொண்டு முதியவர்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அவர்களது இளமைக்காலத்திலே நமக்காகவும் நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும் அவர்கள்; உழைத்ததை எல்லாம் நாம் மறந்தேவிடுகின்றோம். மழையிலும் வெயிலிலும், சூட்டிலும் குளிரிலும், இரவிலும் பகலிலும் அவர்கள் குடும்பத்துக்காக பாடுபட்டதையெல்லாம் நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
ஆனால் அத்தகைய மனிதர்களை மதித்துப் போற்றவும் கௌரவித்து வாழ்த்தவும் உலகில் சிலர் இல்லாமலும் இல்லை.
பலர் தங்களது மகிழ்ச்சியான தருணத்தை; ஆர்ப்பாட்டமா களிக்கின்ற நேரத்திலே சிலர் மட்டும் தங்களது மகிழ்ச்சியான தருணத்தை முதியவர்களை நினைந்து அவர்களது தேவைகளை உணர்ந்துதங்களால் இயன்றவரை அவர்களுக்கு உதவிசெய்து மகிழ்கின்றனர். இத்தகையவர்கள் நிச்சயம் தெய்வத்துள் வைக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment