18 Feb 2018

மட்டக்களப்பு- களுவன்கேணி கடலில் மூழ்கி நுவரெலியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

SHARE
மட்டக்களப்பு- களுவன்கேணி கடலில் மூழ்கி நுவரெலியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நுவரெலியா- லிந்துல- தலவாக்கல பிரதேசத்தைச்சேர்ந்த   16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா என்பவரே உயிரிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளதாக   ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர  சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றினை எதிர்பார்த்த நிலையில் உயர்தர வகுப்பில் தொழில் நுட்பம் படிப்பதற்கென மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள   குடும்ப உறவினரது வீட்டில் தங்கியிருந்தார்.

தனது ஒத்த வயதுடைய நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்தவேளை அலையில் அள்ளுண்டு   இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் மீனவர்களது உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் ஏறாவூர் பொலிஸார் சகிதம் கடற்கரைக்குச் சென்று   சடலத்தை பார்வையிட்டதையடுத்து    சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக செங்கலடி   பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து   விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








SHARE

Author: verified_user

0 Comments: