1 Feb 2018

புறாக்களைத் திருடிய சந்தேக நபர்கள் கைது

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி, மிச்நகர் ஆகிய கிராமங்களிலுள்ள வீடுகளில் உளவியல் துணைக்காகவும் அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வந்த மயில் புறாக்கள் திருட்டுப் போயுள்ளது பற்றி முiயிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெவ்வேறு கிராமங்களிலுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 28 புறாக்கள் புதன்கிழமை 31.01.2018 திருடப்பட்டுள்ளன.

இத்திருட்டு இடம்பெற்ற நிகழ்வு சிசிரிவி காணொளிக் கமெராக்களிலும் பதிவாகியுள்ளது.

புறாத் திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் 15 புறாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு வகையான அழகுப் புறாக்கள் தற்போது உளவியல் துணைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை மிகப் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: