1 Feb 2018

“வானவில் குடும்ப” அநாதைச் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

SHARE
முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால்  அநாதைச் சிறுவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “வானவில் குடும்பம்” அது ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் முகமாக சுமார் 140 முஸ்லிம் தமிழ் சிறுவர்களுக்கு பாடசாலை எழுது கருவிகள், புத்தகப் பை மற்றும் காலணிகளுக்கான கொடுப்பனவு என்பன வழங்கி வைக்கப்பட்டதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ.ஜி.எம். பஹீ தெரிவித்தார்.
வியாழக்கிழமை 01.02.2018 ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள  “வானவில் குடும்ப” சிறார்களும் அவர்களது உறவினர்கள் உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: