16 Feb 2018

கட்டுத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு இளைஞன் தற்கொலை

SHARE

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல் கிடைக்கப் பெற்றதன் பேரில் வியாழக்கிழமை 15.02.2018 குறித்த இளைஞனையும் அவர் பயன்படுத்திய கட்டுத் துப்பாக்கியையும் ஸ்தலத்திற்குச் சென்று மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வெலிக்காக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த  கந்தையா பிரகாஸ் (வயது 19) தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதை உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: