மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின்படி மேலும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 2 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், சுயேட்சைக்குழு 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பிரதேச சபைக்கு அனைத்துக் கட்சிகளிலுமிருந்து, மொத்தம் 21 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment