(சுதன்)
மட்டக்களக்களப்பு மாவட்டம் நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகமும், அக்கிராம மக்களும் இணைந்து தைப் பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தன்று (14) காலை 6.30 மணியளவில், நாவற்காடு திருவள்ளுவர் சதுக்கத்தில் மாபெரும் பொங்கல் விழா ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
அன்றயதினம் பொங்கல் விழா நிறைவு பெற்றதும், காலை 9.30 மணியளவில், தொடர்ந்து நாவற்காடு பாரத் விளையாட்டுக்கழ மைதாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. பின்னர் மாலை 2 மணியளவில் நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பாரம்பரிய கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கழகத்தலைவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment