பாலர்பாடசாலை மாணவச்செல்வங்களை சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதில் அதிக அக்கறையினை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,எமது சமூகத்தில் தற்போது பல மாணவர்கள் சிறுவயதிலே ஒழுக்கமற்றவர்களாக நடமாடுவதை நாம் தினந்தோறும் அவதானித்து கொண்டிருக்கின்றோம். பலர் மதுபோதைக்கும் பல்வேறுபட்ட தீய செயல்களிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். அண்மையில் மட்டக்களப்பில் ஒரு பெண்ணுடன் ஒன்பது இளைஞர்கள் இருந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவானது. அதில் சம்பந்தப்பட்டவர்களின் வயது 16-18இடைப்பட்டவர்கள். அனைவரும் மண்ணில் பிறக்கையில் நல்வர்கள் தான் ஆனால் அவர்களை வளர்ப்பதில் தான் பாரிய பங்கு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. சிறுபராயத்தில் இருந்து நல்ல செயல்களை காட்டி அதனை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் நாடான நெதர்லாந்தில் குறிப்பிட்ட வயது வரைக்கும் படிப்பில்லாமல் தனி ஒழுக்கத்தை மாத்திரம் கற்றுக்கொடுக்கின்றனர்.இது போன்று பாலர்பாடசாலைக்காலத்தில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆகவே இந்த மாணவர்களை சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாக ஆக்குவதில் பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கு அதிக பங்குண்டு எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment