25 Jan 2018

மைத்திரிபால சிறிசேனவை வெளியில் எடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜ தந்திரம் பாவிக்கப்பட்டது – ஜனா

SHARE
2015 ஜனவரி 08 இற்கு முன்பு இந்நாட்டிலே இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் கொடுங்கோல் ஆட்சியை தமிழ் பேசும் மக்களின் உதவியுடன் நாங்கள் மாற்றியிருந்தோம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் தோல்வியடைவார் என்பதை எமது தலைவர் சம்பந்தன் ஐயா நேரடியாகவேகூறி, மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து மைத்திரபால சிறிசேனவை வெளியில் எடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜ தந்திரம் பாவிக்கப்பட்டு அவரை வெளியில் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய தேசியக் கட்சிகூட இந்தத் தேர்தலிலே சுதந்திரமாக பங்கு பற்றுகின்றார்கள். 
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலே அரசியல் போராட்டமாக இருந்த போராட்டம் பின்னர் வான்படை, கடற்படை, பொலிஸ் படை என சகல படைகளையும் கொண்ட அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆயுதப் போராட்டமாக மாறியது.  பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2009. மே மாதம் இலங்கை நாட்டினால் முடியாமல் 20 இற்கு மேற்பட்ட நாடுகளின் உதவியுடன் அந்த அயுதப் போராட்டமும் மௌனிக்கப்பட்டது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா தயாழினியின் வீட்டில் செவ்வாய்க் கிழமை (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

2001 ஆம் அண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியஙக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக அரசியல் ரீதியாக இன்றுவரைப் போராடிக் கொண்டிருக்கின்றது. 2009 மே 19 வரை இந்நாட்டிலே தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள், அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இந்நாட்டின் மூத்த குடியான தமிழ் மக்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். 2009 ஆம் அண்டுக்குப் பின்னர் இன்றுவரை அந்தப் பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. அந்த ரீதியில் ஜனாநாயகப் போராளிகள் அமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டு பெரும் தேசியக் கட்சிகள் அவர்களது அமைப்பாளர்களான முகவர்களுடாக கோடிக்கணக்கான பணங்களைக் கொடுத்து அதை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் தேசியக் கட்சிகளில் கட்த காலங்களில் அடிவருடிகளாக இருந்தவர்களும் எமது மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் எந்த விதமான கொள்கைகளுமில்லை அவர்கள் அனைவரினதும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதாகத்தான் இருக்கின்றன. இவ்வாறானவர்கள் அனைவரும் நேர்மையான அரசியலைச் செய்யாமால் எமது கூட்டமைப்பைப் பற்றித்தான் பேசித்திரிகின்றார்கள். 

இவர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தும், வெட்கம் கெட்ட, மானம் கெட்ட தமிழர்களாக இருக்கிக்றார்கள்.

எமது போராட்டங்களுக்கு நியதயம் கிடைக்க வேண்டும் வடக்கு கிழக்கு இணைந்து அந்த மானிலத்திலே கூடுதலான அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு சுயாட்சிக்காக தமிழ் தேசிய்க கூட்டமைப்பு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

2015 ஜனவரி 08 இற்கு முன்பு இந்நாட்டிலே இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் கொடுங்கோல் ஆட்சியை தமிழ் பேசும் மக்களின் உதவியுடன் நாங்கள் மாற்றியிருந்தோம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் தோல்வியடைவார் என்பதை எமது தலைவர் சம்பந்தன் ஐயா நேரடியாகவேகூறி, மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து மைத்திரபால சிறிசேனவை வெளியில் எடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜ தந்திரம் பாவிக்கப்பட்டு அவரை வெளியில் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய தேசியக் கட்சிகூட இந்தத் தேர்தலிலே சுதந்திரமாக பங்கு பற்றுகின்றார்கள். 

பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செவ்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டு ஒப்ந்தங்களையும் அமுல்படுத்த விடாமல் இருந்தும் இந்நாட்டிலே உள்ள  இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும்தான் தடுத்திருந்தன. இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்குமானால் கடந்த காலங்களில் இடம்பெற்ற அழிவுகள் ஒன்றும் நடந்திருக்கமாட்டாது என அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: