சட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் (22) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை காவல்; பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றி வருகை தந்த உழவு இயந்திரமொன்றை காவல் துறையினர் பரிசோதனைக்குட்படுத்த முயன்ற போது காவல் துறையினர் நின்ற இடத்தை கடந்து வேகமாக சென்றதனால் தான்தோன்றீஸ்வரம் ஆலய முன்றலில் மரம் ஒன்றில் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து செல்லமுடியாத வழியொன்றில் செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
இச்சம்பவத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment