14 Jan 2018

இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை – ஜனா

SHARE
இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்கள்  நிம்மதியாக வாழ்ந்ததில்லை. இந்நாட்டிலே சிங்களம் மட்டும் என்ற சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டதோ, அன்றே தமிழர்கள்; ஒடுக்கப்பட்டார்கள். 
என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பின் பாலையடி வட்டாரத்திற்கான காரியாலயம் இன்று வெள்ளிக்கிழமை மாலை (12) நெல்லிக்காடு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

இலங்கயிலே தமிழன் வாழ்கின்றான், அதுவும் உரிமையிழந்து வாழ்கின்றான்,  தமிழனிம் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, தமிழினம் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்வுலகுக்கு  எடுத்துக் காட்டியது ஆயுதப் போராட்டம்தான் என்பதை யாவரும் அறிவோம்.  2009 ஆம் ஆண்டு அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்; தமிழர்கள் இன்றும் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருப்பது தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.

கல்வி, காலை, கலாசாரம், பொருளாதாரனம் உள்ளிட்ட பல வழங்களை நாங்கள் கடந்த காலங்களில் இழந்நிருக்கின்றோம். இவ்வாறான வழங்களை எமக்குரிய நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைத்தவுடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் இலெட்சக்கணக்காக இழந்த உயிர்களை நாம் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாது. 

இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே தமிழ் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. இந்நாட்டிலே சிங்களம் மட்டும் என்ற சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டதோ, அன்றே தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இதற்கான ஒரு அரசியல் தீர்வுக்காக பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என இரண்டு ஒப்பந்தங்களும் கிளித்தெறியப்பட்டன. இதன் காரணத்தினால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் இன்று நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். 

இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாகவிருந்த பெரும்பான்மைக் கட்சிகளில்கூட எமது தமிழ் மக்களில் சிலர் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றார்கள். தமிழன் ஒருவன் பெரும்பான்மைக் கட்சிகளுக்குத் துணைபோகின்றான், பெரும்பான்மைக் கட்சிக்கு வாக்குக் கேட்டு வருகின்றான், என்றால் அவருக்கு வெட்கமில்லையா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கக் கூடாது, பலவீனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறானவர்கள் பெரும்பான்மைக் கட்சிகளில் இறக்கி விடப்பட்டிருக்கின்றார்கள். இதுவரை காலமும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடாமல், சுகபோகங்களை அதுபவித்துக் கொண்டிருந்தவர்கள், இந்த தேர்தலில் தேசியக் கட்சிகளினூடாகவும், சுயேட்சைக் குழுக்களுடாகவும் பல் இறக்கி விடப்பட்டிருக்கின்றாரகள். 

படகுச் சின்னத்தில் தேர்தல் கேட்டு வருபவர்களு இந்தத் தேர்தலில் தேல்விப் பயம் பிடித்துள்ளது. இவ்வாறானவர்கள் போராட்டத்தைப் பற்றி அவர்கள் எமக்குச் சொல்லத்தர வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் 37 வருடகாலமாக நாங்கள் போராட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள். 1983 ஆம் அண்டு போராட்டத்தில் இணைக்கப்பட்ட நாங்கள் வெடிப்பட்டு வடுக்களைச் சுமந்து நிற்கின்றோம். எனவே வேறு யாரும் இங்கு வந்து தமிழ் மக்களின் உரிமைகளைகப் பற்றிப் பேச வேண்டிய தேவை இல்லை என அவர்  தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: