மாவட்ட செயலக பொங்கல் விழா எதிர்வரும் 16 ஆம்திகதி காலை 6.30 மணிக்கு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் பாரம்பரிய கலாசார பவனியுடன் தொடங்குகிறது.
இந்த பாரம்பரிய கலாசார பவனி மாவட்ட செயலகம் வரையில் வந்து நிறைவடையும். அதனையடுத்து தைத்திருநாள் நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறவுள்ளது.
மாவட்ட செயலக பொங்கல் விழாவில், கலாசார நிகழ்வுகளும் விளையாட்டுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளினாலும் தனித்தனியாக பொங்கல் மேற்கொள்ளப்படும்.
மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த உழவர் திருநாள் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment