10 Jan 2018

களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டி.

SHARE
களுவாஞ்சிகுடி மெக்ஸ்  விளையாட்டுக் கழகம் தனது 9 வது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக 2017 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென் பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் விசேட அம்சமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக அணிக்கு 11 பேர் கொண்ட  20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக அமைந்திருந்தது. 
இச் சுற்று தொடரின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. 

இதில் முதல் இடத்தினை குருமண்வெளி றொபின் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டு ரூபா 25000 பண பரிசிசையும் மாபெரும் வெற்றி கிண்ணத்தையும் சுபீகரித்தது, இரண்டாம் இடத்தினை கோட்டை கல்லாறு சுவாட்டி விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டு ரூபா 15000 பணபரிசசையும் மாபெரும் வெற்றி கிண்ணத்தையும் சுபீகரித்தது. அத்துடன் தேசிய ரீதியில் பாடசாலைக்கிடையில் 17 வயது பிரிவில் கபடி போட்டியில் முதலாம் இடத்தினை பெற்ற மட்.கண்டு மணி மகா வித்தியாலய மாணவர்களும், உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டம் வரை சென்ற களுவாஞ்சிகுடி மட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் அ.டிலக்ஷன்  உள்ளிட்டோரும்இமன்போது கௌரவைக்கப்பட்டதுடன், அவர்களை நெறிப்படுத்திய இ.புவனேந்திரகுமார், எஸ்.சுரேந்திரன் ஆசிரியர்களும் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தினால்  கௌரவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் , மட்டக்களப்பு நீர் பாசன பொறியியலாளர் எந்திரி கு.செந்துரன், பிரபல அரச ஒப்பந்தகாரர் மே.வினோராஜ் மற்றுமம் களுவாஞ்சிகுடி நியூ கிமாலயா கல்வி நிலைய வணிக பிரிவு ஆசிரியர்கள், களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டு கழக தலைவர் வ.சதீஷ், மிலேனியம் விளையாட்டு கழக தலைவர் நா.கோகுலதாஷ் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தர்.


















SHARE

Author: verified_user

0 Comments: