மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு 01.12.2017 அன்று அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக மேல் முறையீட்டு நீதி மன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி தனக்கு எதிராக வழங்கப்பட்ட இடம்மாற்றத்திற்கு எதிராக நேசகுமாரன் விமலராஜ் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது தவிசாளர் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு சீனித்தம்பி யோகேஸ்வரன் பாரளுமன்ற உறுப்பினர், பணிப்பாளர் விசாரணை அதிகாரி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் காணி சீர்திருத்த ஆணைக்குழு, செயலாளர் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பணிப்பாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அம்பாறை மாவட்டம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்காளியினால் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாவது அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ஆனது தன்னிச்சையாக எந்த விதமான காரணங்களும் சரியாக காட்டப்படாமல் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மேலும் நேசகுமாரன் விமலராஜ் பணிப்பாளராக கடமையாற்றிய போது தன்னுடைய கடமையில் அச்சமின்றி பாகுபாடின்றி சட்ட விரோத காணி அபகரிப்புக்கு எதிராக செயற்பட்டமையால் 22.02.2017 அன்று புன்னக்குடா நில அபகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று வீடு திரும்பிய அன்றைய தினம் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி தற்போது பொலீஸ் பாதுகாப்பபுடன் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்.
மேலும் தனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களினாலும் அவர்களின் ஆதரவளர்களினாலும் தொடச்சியாக சமூக வலைத்தளங்களில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்களை பரப்புவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனுவில் குறிப்பிடுவதாவது 11.10.2017 அன்று அனுமதி பெற்று பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கலந்துரையாடும் போதுதான் அவருடைய பாதுகாப்பு உத்தியயோகஸ்தர்களினால் தான் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர அன்றைய சம்பவ இடமான பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன் தனக்கு வழங்கப்பட்ட பொலீஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி மனுவை சிரேஷ்ட சட்டத் தரணி ஜீ.ஜீ.அருள்பிரகாசம் அவர்களது அறிவூட்டலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன உடன் சட்டத்தரணி எம்.என்.சிறிமானே அவர்கள் வழக்குக்கு தோற்றினார்கள்.
கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதிகளான எல்.ரி.டெகிதெனிய மற்றும் சிறின் குணரத்ன அவர்களால் மேற்படி இடமாற்றத்திற்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment