2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள்.
மட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில்.
மட். புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ராஜன் திபிகரன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவ பீடத்துக்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த ராஜன் – சாரதாதேவி தம்பதியரின் புதல்வராவார்.
கணிதப் பிரிவில்..
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் சிவா விதுசனன் கணிதப் பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு – கிரான்குளம் 7ஆம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிவா டேஸ்ரஜனி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு கணிதப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் தொழில்நுட்பவியல் பிரிவில்..
மட்டக்களப்பு பட். களுதாவளை மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு – திருப்பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி இராசலெட்சுமி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.
மட்டக்களப்பில் வணிகப் பிரிவில்..
வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா வணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த விஜயராசா மதிமலர் அவர்களின் மகள் இவ்வாறு வணிகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
பொறியியல் தொழினுட்பத்தில் ...
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய மாணவனான அர்ஹா பிச்சை முஹம்மது இம்ரான் என்ற மாணவன் 3ஏ தர சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் கலைத்துறையில் ....
மட்.துறைநீலாவணை மாகவித்தியல மாணவன் திருச்செல்வம் கேதீஸ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் திருச்செல்வம் சரஸ்வதி ஆகியோரின் புதல்வராவார்.
0 Comments:
Post a Comment