29 Dec 2017

பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அற்ற நிலையில் அனாதையாக்கப்பட்டுள்ளது - கருணா அம்மான்

SHARE
களுதாவளையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக இருபத்தைந்து வீதத்தினை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உடன்படிக்கை ஐக்கிய தேசிய கட்சி பட்டடிருப்பு தொகுதி அமைப்பாளரினால் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த விடயத்தில் களுதாவளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் வியாழக்கிழமை (28) ஊடகங்களுக்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…..

பட்டிருப்பு தொகுதி மக்கள் நிற்சயமாக சிந்தித்துத்தான் இம்முறை வாக்களிப்பார்கள். நான் பட்டிருப்பு தொகுதியில் மிகவும் கடுமையான கவனம் சொலுத்தியியுள்ளேன். முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஊடுருவல் இன்று கூடியுள்ளது இதனை மிகவிரைவாக கட்டுப்படுத்த வேண்டும்.

பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அற்ற நிலையில் அத்தொகுதி அனாதையாக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று ஐக்கிய தேசிய கட்சி பட்டடிருப்பு தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி அவர்கள் ஒரு பிழையான வேலையை செய்துள்ளார். அது என்னவென்னில் களுதாவளையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக இருபத்தைந்து வீதத்தினை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உடன்படிக்கை செய்துள்ளார் இந்த விடயத்தில் களுதாவளை மக்கள் மிககவனமாக இருக்கவேண்டும். இது எமக்கு எதிர்காலத்தில் இக்கட்டான நிலையினை தோற்றுவிக்கும்.

எப்படிப்பட்டவராக இருந்தாலும் தேர்தலில் இறங்கினாலும் வெல்வோம் என்ற இறுமாப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. அதனால் தராதரம் இன்றி இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இறுமாப்புக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அவர்களுக்கு இந்த நற்பாசை தொடர்ச்சியாக இருந்து வருகின்றனது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தளவில் பட்டிருப்பு தொகுதியும் ஒரு தளம்பல் நிலையில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு தொகுதியில் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவிற்கு பிற்பாடு ஒரு நிலையான தலைமைத்துவம் இன்னும் உருவாக்கப்படவில்லை இதனை உருவாக்கவேண்டும் அவர் ஒரு மாமனிதன் சிறந்த அரசியல்வாதி சதிமுயற்சியால் பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் இதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் புத்தி ஜீவிகளை படுகொலை செய்வது முட்டாள்களின் வேலையாகும்.

ஐக்கிய தேசிய கட்சி பட்டடிருப்பு தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி அவர்கள் ஒரு பிழையான வேலையை செய்துள்ளார். அது என்னவென்னில் களுதாவளையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக இருபத்தைந்து வீதத்தினை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உடன்படிக்கை செய்துள்ளார் இந்த விடயத்தில் களுதாவளை மக்கள் மிககவனமாக இருக்கவேண்டும்.  என அவர் இதன்போது தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசனின் பங்குபற்றுதலுடன் கடந்த 22.07.2017 அன்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் 300 மில்லியன் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு களுதவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நடப்பட்டு தற்போது நிருமாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: