தமிழ் தேசியத்திற்கு வாக்களிக்காமல் அற்ப, சொற்ப சலுகைகளுக்காக வேண்டி மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் எம்மினத்திற்காக தங்களது இன்னுயிர்களைத் தியாகம் மக்களின் ஆன்மா ஈடேற்றத்திற்குச் செய்யும் துரோகமாக அது அமைந்துவிடும். எனவே இதுவரை காலமும் தமிழ் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக என்றும் உழைத்துவரும் அனைத்து தமிழ் மக்களும் இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்திலிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.
என மட்டக்களப்பு களுதாவளை வடக்கு வட்டாரத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் முருகப்பன் தேவதாஸன் தெரிவித்தார். செவ்வாய் கிழமை (26) தமது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வடக்குக் கிழக்குவாழ் தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றார்கள். இதற்கிடையில் பெரும்பான்மையினக் கட்சிகள் எமது பிரதேசங்களுக்குள் புகுந்து எம்மினத்தின் வாக்குக்களைச் சூறையாட நினைக்கின்றார்கள். இவ்வாறான விடையங்களுக்கு எமது மக்கள் தலைசாய்க்கக்கூடாது. அபிவிருத்தியை தேசிய கட்சிகளைச் சார்ந்தவர்களால் மாத்திரம் செய்யமுடியாது. அவற்றை எங்களாலும் செய்யமுடியும். கிராமமமட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அமையப் பெற்றுள்ள இந்த உள்ளுராட்சி மன்றத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பெற்றும். அதனை வைத்துக் கொண்டு இந்தப் பிரதேசத்தை பாரிய அபிவிருத்தி செய்யப்படும்.
மக்கள் மனங்களை வென்றவர்களையும். சமூக சேவைகளைப் புரிந்து வருபவர்களைனயும் சரியான முறையில் இனம்கண்டுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எனவே எம்மைப் போன்றவர்கள் தற்போது மேற்கொண்டுவரும் சமூக சேவையை உள்ளுராட்சிமன்ற அரசியலூடாக பல்கிப் பெருக்கி ஓர் நிரந்தர சமூக சேவையினை மேற்கொள்வதற்காகத்தான் இந்த தேர்தலில் நான் களமிறங்கியுள்ளேன்.
இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து இக்கிராம மக்களின் நாடித்துடிப்பை நான் அறிந்தவன் என்ற வகையில் எவ்வாறான விடையங்களை முன்நெடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் எமக்குத் தெரிவும்.
எதிர் வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்திலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை எமது மக்கள் நிலைநாட்ட வேண்டும். இவற்றினை விடுத்து, வீதி அமைத்தல், பொது அமைப்புக்களுக்கு உதவிகள் வழங்குதல், போன்ற சில விடையங்களைத் தேசிய கட்சிகள் செய்கின்றார்கள், என காரணம் காட்டி மாற்றுக் கட்சிகளுக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களித்தால் எம்மினத்திற்காக தங்களது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களின் ஆத்தமாக்களுக்கு நாம் செய்யும் துரோகமாக அமைந்துவிடும்.
எனவே களுதாவளைக் கிராமம் இரண்டு வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இரண்டு வட்டராடாரங்களிலுமுள்ள எமது கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வாக்கேனும் மாற்றுக் கட்சிக்கு அளிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம் வழங்கி தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment