மின்சாரக் கம்பியில் சிக்குண்டு காட்டுயானை
உயிரிழப்பு.
புதன்கிழமை(11.02.2026) கிராமத்திற்குள் உள்நுளைந்துள்ள இக்காட்டு யானை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அப்பகுதியில் பெரும்போக வேளாண்மைச் செய்கை அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் வயலுக்கு பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கிய நிலையிலேயே இக்காட்டுயானை மரணித்துள்ளது.
இச்சம்பவம் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மின்சாரக கம்பி வேலிநடப்பட்ட நபரை சந்தேகத்தின் பெயரின் பொலிசார் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசம் அதிகளவு காட்டுயானைத் தாக்குதலுக்குள்ளான பிரதேசமாக காணப்படுவதோடு, காட்டு யானைத் தாக்குதல்களால் அதிகளவு மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு, மக்களின் பல சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ள இந்நிலையில் அவ்வப்போது இவ்வாறு காட்டு யானைகளும் உயிரிழந்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment