27 Dec 2017

பெரியகல்லாற்றில் கத்திக் குத்துக்கிலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபகமாக உயிழிழப்பு.

SHARE
மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் செவ்வாய்கிழமை (26) மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் கத்திக் குத்துக்கிலக்காகி இளைஞர் ஒருவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

பட்டாசு கொழுத்தியத்தியத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாச்சாச் மச்சினனுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அருளானந்தம் வீதி பெரியகல்லாறு முதலாம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியராகக் கடடைபுரிந்து வரும் யேசுதாசன் தெமேசன் என்பவர் கழுத்தில் கத்திக் குத்துக்கிலக்காகி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலத்திக பரிசோதனைகளுக்காகவும், உடற்று பரிசோதனைகளுக்கவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்க்ள தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பெரியகல்லாற்றைச் சேர்ந்த 19 வயதுடைய பரிமளராஜா அபிசன் பொலிசில் சரணடைந்துள்ளார். 

இவ்விடத்திற்கு உடன் விரைந்த பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: