20 Dec 2017

மட்.மைலம்பாவெளி பொலிஸ் காவலரணை அகற்றுமாறு ஜனாதிபதிக்குக் கடிதம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மைலம்பாவெளியில் அமைந்துள்ள கருணாலயம் எனும் தர்ம இஸ்தாபனத்திற்குச் சொந்தமான காணியில் மிக நீண்ட காலமாக நிலை கொண்டுள்ள பொலிஸ் காவலரணை அகற்றுவது தொடர்பில் கருணாலயம் அமைப்பின் முகாமையாளர் இரா.முருகதாஸ் செவ்வாய்க்கிழமை (19) ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….
தர்ம செயற்பாடுகளை முன்னெடுதுதுவரும் எமது நிறுவனம்.  மைலம்பாவெளியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் ஆலயம், இராம்நகர் வீட்டுத்திட்டம், கரணாலயம் சிறுவர் இல்லம் என்பவற்றை, இஸ்த்தாபித்து சேவை புரிந்து வருவதுடன், ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் விழுமியங்களையும், நற்பண்புகளையும் விதைக்க விசேட செயற்றிட்டம் ஒன்றையும் செய்து வருகின்றது. 

கடந்த அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் எமக்குச் சொந்தமான காணியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இப்பொலிஸ் காவலரனை  அகற்றி அவ்விடத்தை எமக்கு ஒப்படைக்குமாறு  கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கோரிவருகின்றோம். இதுசம்மந்தமாக சம்மந்தப்பட்ட அமைச்சு அதனோடிணைந்த பொதுப்பு அதிகாரிகள், ஆகியோருக்கும் தெரியப்படுத்தியது மட்டுமல்லாமல், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் என்பவற்றிலும் இவ்விடையம் பிரஸ்த்தாபிக்கப்பட்டு 3 தடவைக் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

இவற்றுக்குரிய தீர்வு கிடைக்காத நிலையில் 2016.12.31 அன்று இதுசம்மந்தமான கவனயீர்ப்பு பிரார்த்தனை நிகழ்வை எமது சிறார்களுடன் இணைந்து மேற்படி பொலிஸ் காவலரண் முன்பாக நடாத்தினோம். 2017.04.26 அன்று திகதியிடப்பட்ட கடித்தத்தின் மூலம், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால், இவ்வருடம் டிசம்பர் மாதமளவில் காணியும், கட்டடத்தையும் பராமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பபட்டது.

பின்னர் நாம் எழுத்து மூலம் தொடர்பு கொண்டபோது 2017.10.10 திகதியிட்டு, இதுவிடையமாக பொலிஸ் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த சிரேஸ்ட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிருவாகத்திற்கு ஆலோசனைக்காகவும், கட்டளைக்காகவும், கோவை அனுப்பப்பட்டதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எமது விடையம் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக தெழிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. 151 வருடத்தை பெருமையுடன் கொண்டாடும் பொலிஸ் திணைக்களத்தின் இழுத்தடிப்பும், நியாயமற்ற நடவடிக்கையும், எம்மை வேதனையையும், விரக்தியையும் கொள்ளவைத்துள்ளது.

தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் உரையாற்றியபோது கிழக்கு மாகாணத்தில் படையினர் ஆக்கிரமித்திருந்த சகல காணிகளையும்,  விடுவித்து விட்டதாகத் தெரிவித்திருந்தீர்கள்.  எனினும் எமது காணி இன்றுவரை விடுவிக்கப்படாததை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை, கவனத்திற்கெடுத்து, 2017.12.31 இற்கு முன் காணியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு தயவுடன் கெட்டுக் கொள்கின்றோம். இது விடையமாக விளக்கமளிப்பதற்காக 32 சிறார்களுடன், இங்கு கடமையாற்றும் 52 ஊழியர்களும், தங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட நேரத்தை ஒதுக்கித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடித்தின் பிரதிகள் டி.எம்.சுவாமிநாதன் சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புணர்வாழ்வழிப்பு, மீழ்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு, அரசாங்க அதிபர் மட்டக்களப்பு, மாகாணப் பணிப்பாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கிழக்கு மாகாணம், பொலிஸ்மா அதிபர் கொழும்பு, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (நிருவாகம்) கொழும்பு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் மட்டக்களப்பு மாவட்டம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: