முனைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் மட்டக்கள்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாதிப்புற்ற இரண்டு குடும்பங்களுக்கு ஒரு லெட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் சனிக்கிழமை (09) வழங்கி வைக்கப்பட்டன.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார் தலைமையில் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது மேலும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் கச்சேரி கணக்காளர் க.நேசராசா, முனைப்பு ஸ்ரீ சுவிஸ் நிறுவனத்தின் தலைவர் மா.குமாரசுவாமி, முனைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பின் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் ஏ.தயானந்தரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வதை;தனர்.
இந்த வருடம் இதுவரையில் 34 வாழ்வாதார உதவித்திட்டங்கள் மட்டக்களப்பு மவாட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டடுள்ளதாக அதன் தலைவர் மா.சசிகுமார் இதன்போது தெரிவித்தார்
0 Comments:
Post a Comment