பெரியகல்லாறு றோசாலயா சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆங்கிலச் சொற்களை மனனம் செய்துஉச்சரிப்புக்களுடன் கூறும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் என்.சவுந்தரநாயகம் தலைமையில் நடைபெற்றது.
பெரியகல்லாறு, கோட்டைக் கல்லாறு, ஓந்தாச்சிமடம், துறைநீலாவணை, ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள 14 பாடசாலைகளைச் சேர்ந்த 225 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைபெற்ற ஆங்கிலச் சொற்களை மனனம் செய்து உச்சரிப்புக்களுடன் கூறும் போட்டி இதன்போது இடம்பெற்றது.
வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வில்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிதராஜன் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக பட்டிருப்புகல்வி வலய ஆங்கிலப் பாடத்திற்குப் பொறுப்பான உதவிக் கல்விப்; பணிப்பாளா எஸ்.சந்திரகாசன் மற்றும் கல்லாறு கிறிஸ்தவ தேவாலய மதகுருமார்கள், இந்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் இபொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது போட்டிகளில் வெற்றிபெற்றமாணவர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் வெற்றிகிண்ணங்களும் றோசாலய அமைப்பினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment