மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை - நீலண்ட மடு பிரதேசத்தில் திங்கட் கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
மேற்படி கற்சேனைப் பகுதியில் அமைந்துள்ள நீலண்டமடு எனும் இடத்தில் வீடு ஒன்றில் திங்டக் கிழமை இரவு தகராறுகள் இடம்பெற்றுள்ளன. இதனை அயலிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் தடுக்க முற்பட்டுள்ளனர். இவ்வேளையில் தகராற்றில் ஈடுபட்ட நபர் அவரது கையிலிருந்து சீவல் தொழிலுக்ககப் பயன்படுத்தும் கத்தியினால் இளைஞன் ஒருவனின் வயிற்றை வெட்டியுள்ளார். மேலும் மற்றைய இளைஞனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
வயிற்றுப் பகுதியில் வெட்டுப்பட்ட இளைஞன் இஸ்த்தலத்திலே பலியாகியுள்ளான். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் அரசடித்தீவுக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய அழகுதுரை அதீஸ்காந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அரசடித்தீவு கிராமத்தைச் சேர்நத 18 வயதுடைய வசந்தராசா டெனீஸ்காந் என்ற இளைஞனுக்கு இடுப்புப் பகுதியில் கத்தி வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசார் உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அயல் வீட்டில் சீவல் தொழிலுக்காக வந்துசெல்லும் மகிழடித்தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர் அவ்வீட்டிலிருந்த பெண்ணொருவருடன் தகாத முறையில் தொடர்ந்து சுமார் ஒருவருடத்திற்கு மேலாக நடந்துகொண்டு வந்துள்ளார். திங்கட் கிழமையும் (20) அவ்வாறு அந்த தொழிலாளர் வந்துள்ளார்.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த குறித்த சீவல் தொழிலாளர் வீட்டுத் தலைவனை அழைத்துள்ளார். அப்போது அவரது மனைவி ஏன் எனது கணவனை கூப்பிடுகின்றீர்கள் எனக்கேட்டுள்ளார். மேலும் குறித்த குடும்பத்தாரின் மகனிக் நண்பர்களும் அங்கு நின்றுள்ளார்கள் அப்போது நண்பர்களும், என் எனது நண்பனிப் தந்தையைக் கூப்பிடுகின்றீர்கள் என வினவியுள்ளார்கள்.
அதற்கு குறித்த சீவல் தொழிலாளர் சத்தமாக பேசியுள்ளார். இளைஞர்களும் என்ன அடிக்கப்போகின்றீர்களான என வினவியுள்ளனர். அதற்கு சீவல் தொழிலாழி அவர் கொண்டு வந்த துவிச்சக்கர வண்டியைத் தூக்கி ஒரு இளைஞனுக்கு அடித்துள்ளார். அதனைத் தடுக்கச் சென்ற மற்ற இளைஞனான வசந்தராசா டெனீஸ்காந்த என்பவருக்கு அவர் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த சீவல் தொழிலுக்குப் பயன்படுத்தும் கத்தியாhல் குத்தியுள்ளார். இவற்றi அவதானித்துக் கொண்டிருந்த அழகுதுரை அதீஸ்காந்தன் என்பவர் சீவல் தொழிலாளரான கொலையாளியைத் தடுக்க முற்பட்ட போது அவ்விளைஞனுக்கு கத்தியால் வயிற்றுப் பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
என இச்சம்மவத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்று காயப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார செவ்வாய் கிழமை (21) காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து பரிசோதனைகளையும், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மரணமடைந்த இளைஞன்அழகுதுரை அதீஸ்காந்தன்
காயப்பட்ட இளைஞன் வசந்தராசா டெனீஸ்காந்
0 Comments:
Post a Comment