தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மூன்று மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது.
2017.11.24 ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு திருகோணமலை நகரமண்டபத்திலும், 2017.11.25 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்திலும்,
2017.11.25 ஆம் திகதி மாலை 02.30 மணிக்கு மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்திலும், இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்;சாளருமான எம்.எ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
எவ்வித கட்சி பேதங்களும் இன்றி அனைத்து அரசியற் பிரமுகர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உயர் கல்வி மாணவர்கள் எனப் பலதரப்பினரும் கலந்து கொண்டு இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவின்மைகளில் இருந்து விடுபட்டு உண்மை விளக்கம் பெறுவதற்கு இக்கலந்துரையாடல் ஒரு வாய்ப்பாக அமைவதோடு மற்றையவர்களுக்கும் தெளிவூட்டுவதற்கும் உதவியாக இருக்கும்.
எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தண்மையை அறிந்து கொள்ள அனைவரையும் அழைப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment