மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகமும் மண்முனை மேற்கு காலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய வருடந்தோறும் நடைபெற்றுவரும் கலைஞர்கள் கலாசார விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (07.11.2017) நடைபெற்றது.
வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கைச் சேர்ந்த, பாரம்பரிய வைத்தியத் துறைகளிலும் கலைத்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற 08 கலைஞர்கள் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களும் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், தமிழ் மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம் போன்ற அம்சங்களுடன் பாடசாலை மாணவர்களின் கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment