போரதீவுப்பற்று செயலகத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொது அமைப்புக்களுக்கு உபகரணங்கள் கடந்த சனிக்கழமை (30) வழங்கி வைக்கப்பட்டன.
பழுகாமம் நண்பர்கள் அமைப்பிற்கு தற்காலிக கொட்டில் அமைப்பதற்கான கூரைத்தகடுகளும், தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்ட முதியோர் சங்கத்திற்கு கதிரைகளும் மற்றும் தம்பலவத்தை பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார உதவித்திட்டமும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோஸ்தர், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment