சட்ட விரோத மது விற்பனை தொடர்பாகக் கிடைக்கப்பபெற்ற இரகசியத் தகவலைக் குறிவைத்து சுற்றி வளைப்புச் செய்து தேடுதல் நடாத்தியபோது கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் நெடிய வாள் ஒன்றுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப் பெற்றஇரகசியத் தகவலையடுத்தே செவ்வாய்க்கிழமை 03.10.2017 மாலை விஷேட அதிரடிப்படையினர் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாகக் கூறப்படும் கலமுனை 1 பகுதியிலுள்ள வீட்டைச் சுற்றிவளைப்புச் செய்து தேடுதல் நடத்தினர்.
ஆனால், சட்டவிரோத மதுவுக்குப் பதிலாக ஒரு கைத்துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் ஒரு நெடிய வாளுமே அவ்வீட்டிலிருந்து மீட்கப்பட்டதோடு சம்பவத்துடன் தொடர்புடைய 62 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றி வளைப்புச் செய்யப்பட்ட அந்த வீட்டில் நீண்ட காலமாகவே சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டினை சோதனை செய்த போதே வீட்டிலிருந்த அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment