நாம் எதிர்பார்ப்புடன் வாய்க்கு ருசியாக சாப்பிடும் உணவுகள்,குளிர்பானங்கள், நஞ்சுள்ள காய்கறிகள்,பழங்களினால்
சிறுநீரங்கள் செயலிழக்கப்படுகின்றது. இதனால் பத்தாண்டு காலப்பகுதிக்குள் சிறுநீரகம் முற்றாக செயலிழக்கப்படுகின்றது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் முத்து முருகமூத்தி தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்டத்தின் அறிவுறுத்தளுக்குமைவாகவும்,மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டல்களுடன் "அழகிய சிறுவர் உலகம்-பேணிப் பாதுகாக்கப்பட எதிர்காலம் "எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் திங்கட் கிழமை பிற்பகல்
நடைபெற்றது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் முத்து முருகமூர்த்தி அவர்கள் பல்லூடகத்தின் மூலம் தெளிவுபடுத்தினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் நமது சிறுநீரங்கள் கழிவகற்றும் அங்கமாகவும்,உடலின் சீர்த்திட நிலையை பேணும் உறுப்பாகவும் திகழ்கின்றது. பல்வேறு காரணிகள் சிறுநீரங்களின் கழிவகற்றல் செயற்பாட்டை பாதிக்கின்றன. இவ்வாறான காரணிகளின் தாக்கம் அதிகரிக்கும் போது சிறுநீரகங்கள் செயலிழக்கின்றது. பரம்பரையான மரபியல் காரணிகள்,நஞ்சுப் பதார்த்தங்கள் சேர்ந்த உணவுகள்,போசணையற்ற உணவுகள்,வரையரையற்ற உடற்பயிற்சி, போதியளவு பாணங்களை அருந்துதல்,நீர் அருந்தாமை போன்ற உணவுபழக்கங்களும், சிறுநீரக அழற்ச்சி,சிறுநீர் வழித்தொற்று
எலிக்காய்ச்சல், செப்ரிசீமியா,நீரிழிவு, குருதியமுக்கம், பாம்புக்கடி போன்ற நோய்களினாலும்,அன்ரிபயோட்டிக் மருந்துகள்
(Antibiotic), வலி நிவாரணிகள்,வேறு காரணிகள் போன்றவற்றினாலும் சிறுநீரக கோளாறுக்கான காரணங்களாகும்.
சிறுநீரகத்திற்கான குருதி வரவு குறையும் சந்தர்ப்பங்களிலும்,சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறுதல் தடைப்படும் சந்தர்ப்பங்களிலும் சடுதியாக சிறுநீரகம் செயலிழக்கப்படுகின்றது. பல்வேறு நோய்களால் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் மருந்துக்களால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புக்களினால் சிறுநீரகம் நேரடியாக பாதிக்கின்றது. இன்று எமது மனித சமூகம் குடிநீர்,இளநீர் போன்றவற்றை தவித்து மென்பானங்கள்,குளிர்பானங்களை அதிக விலை கொடுத்து வாங்கி அருந்துவதன் மூலம் நோயற்ற சமூகமாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் எதிர்பார்ப்புடன் உணவுகளை தேடிச் சாப்பிடுவதன் மூலம் தினமும் பத்துபேருக்கு ஒருவராக நீரிழிவு,உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் போன்ற நீண்ட கால நோய்கள் சிறுநீரக தொழிற்பாட்டை படிப்படியாக பாதிக்கின்றன.இதனால் சடுதியான சிறுநீரக செயலிழப்பின் போது சிறுநீர் கழிவது குறைவடைவதுடன் உடல்வீக்கம்,மூச்சுத்திணறல்,சோர்வு என்பன ஏற்படுகின்றன.நீண்டகால சிறுநீரக பாதிப்பானது பொதுவாக மருத்துவ சோதனைகளின்போது கண்டுபிடிக்கப்படுகின்றது.
சிறுநீரகத் தொழிற்பாடு குறைவடைந்து செல்லும்போது உடல் வீக்கம்,குருதிச்சோகை என்பன ஏற்படலாம்.நீரிழிவு நோயாளரில் அடிக்கடி சீனிமட்டம் மிக குறைவடைந்து காணப்படலாம்.இதன்போது சிறுநீரில் புரதம் கழிவதை காணலாம். பாதிப்புக்கள் அதிகரிக்கப்படும்போது கிறியற்றினைன்,யூரியா அளவுகள் அதிகரிக்கத் தொடங்கும். இதனை கண்டுபிடிப்பதற்கு சிறுநீர், புரதம்,கிறியற்றினைன்,யூரியா,அல்ரா சவுண்ட் ஸ்கேன்,Fbc போன்ற பரிசோதனைகள் மூலம் பரிசித்து பார்க்க முடியும்.சிறுநீரக நோயாளியின் ஒட்டுமொத்த நிலைமையை கருத்திற்கொண்டு சிசிச்சை முறையை கையாள வேண்டும்.அத்துடன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சிறுநீரக தொழிற்பாடு சம்பந்தமாக குருதி சுத்தப்படுத்தல் முறை மூலம் அறிந்துகொள்ளலாம்.இந்நோயினை கட்டுப்படுத்த முதலில் நீரிழிவு, குருதியமுக்கத்தை சரியாக கட்டுப்படுத்தி கொள்ளவேண்டும்.நாளாந்தம் இரண்டு,மூன்று தடவைகள் குடிநீர்,இளநீர் அருந்தி உடலுக்கு ஆரோக்கியமான உடற்பயிற்ச்சியை எங்களால் ஏற்படுத்த வேண்டும்.நஞ்சற்ற உணவுகளையும்,போசாக்குள்ள சத்துள்ள உணவுகளையும், போத்தலில் அடைக்கப்பட்ட பானங்களை தவித்த உணவுகளை நாம் உண்ணவேண்டும்.மதுபாவணை,புகைத்தல்,போன்றவற்றை தவித்து கொள்ளவேண்டும்.
வருடமொரு தடவை மருத்துவ பரிசோதனை செய்து சிறுநீரக செயலிழப்பை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இதற்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றோம்.நாங்கள் கூறிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment