17 Oct 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முன்மாதிரி கூட்டுறவுச் சங்கத்திற்கான விருது

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முன்மாதிரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாக ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அச்சங்கத்திற்கு செவ்வாய்க்கிழமை 17.10.2017 விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற  95வது கூட்டுறவு தின விழாவில் வைத்து அகில இலங்கை தேசிய கூட்டுறவுச் சபைத் தலைவர் டபிள்யூ. லலித் ஏ. பீரிஷ் இந்த விருதினை ஏறாவூர் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் மற்றும் அதன் தலைவர் எம்.பி.எம். சக்கூர் ஆகியோரடங்கிய கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலாபமீட்டும் ஒரு நிறுவனமாகவும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வருடாந்தம் மிகையூதியம் வழங்கும் நிறுவனமாகவும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டுறவுச் சங்க நிருவாகத்தின் கீழ், கூட்டுறவு வைத்தியசாலை, எரிபொருள் நிரப்பு நிலையம், பல்பொருள் அங்காடி, மற்றும் மினி ஆடைத் தொழிற்சாலை என்பன இயங்கி வருகின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: