ஏறாவூர் நகர பிரேத செயலகத்தின்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும், பெண் அலுவலர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை 30.10.2017 மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரில் இடம்பெற்ற இவ்விபத்தில் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கஜேந்தினி யோகீந்திரன் (வயது 44) என்பவரே மோட்டார் சைக்கிளால் மோதுப்பட்டு காயங்களுக்குள்ளாகிய நிலையில் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
களுவாஞ்சிக்குடியிலிருந்து ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு கடமைக்காக வந்தவர் பஸ்ஸிலிருந்து இறங்கி நெடுஞ்சாலையைக் கடக்கும்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதில் அவர் வீதியில் விழுந்து காயம்பட்டார்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார் சைக்கிள் செலுத்திவந்தவரைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment