2 Oct 2017

14 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் வீதி புனரமைப்பு

SHARE
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர், ஹிதாயத் நகர் வீதி புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது
இவ்வீதி புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சுபைரின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் வீதி அபிவிருத்திப் பணியை அடிக்கல் நட்டி ஆரம்பித்து வைத்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முடுக்கி விட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூரிலும் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார்


இதற்கமைய, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின்ஆயிரம் கிலோ மீற்றர் வீதி புனரமைப்புதிட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து ஏறாவூர், ஹிதாயத் நகர் வீதி 14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: