முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசாவின் சிபார்சுக்கமைய கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 40 லெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வாழைக்காலை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஆலயத்தின் நன்மைகருதியும் அந்த ஆற்று ஓரமாக அணைக்கட்டு அமைக்கும்; செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை சனிக்கிழமை (30) மாலை அப்பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராச பார்வையிட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
வாழைக்காலை ஆற்றங்கரையோரத்தில் மிகவும் பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயம் இருந்த வருகின்றது. வருடாந்தம் அப்பகுதியினூடாக மிகவும் பிரசித்திவாய்ந்த தாந்தாமலை ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் இவ்வாலயத்திலிருந்துதான் முள்ளுக் காவடி எடுத்தும், தரிசனம் செய்தும் செல்வது வழக்கம்.
வருடாந்தம் அப்பகுதியில் ஏற்படும் பெரிய வெள்ளப்பெருக்கின்னால் இக்குறித்த ஆற்றில் நீர் வெள்ளக்காடாய் அள்ளுண்டு செல்வதனால் ஓரத்தில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தையும் வெள்ளம் தாக்கக்கூடிய ஆபத்தான் சூழல் அங்கு காணப்பட்டுவருகின்றது. இவிடையத்தை அப்பகுதி வாழ் மக்களும், வாழைக்காலைப் பிள்ளiயார் ஆலய நிருவாகமும் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க அப்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த மார்கண்டு நடராச மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு 40 லெட்டசம் ரூபா செலவில் பரிய அணைக்கட்டு ஒன்று அமைக்கப்பபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment