6 Sept 2017

கிழக்கு மாகாண அதிபர்கள் இடமாற்ற விடயத்தில் இனி முரண்பாடுகள் ஏற்படாது. கிழக்கு மாகாணத்துக்கான சிறப்பான கொள்கை வகுத்தமைக்காக பாராட்டுnகிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அதிபர்கள் முறையற்ற இடமாற்றங்களுக்கு உட்பட்டு முரண்பாடுகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளான விடயம் புதிய இடமாற்றக் கொள்கை வகுக்கப்பட்டதின் மூலம் முற்றாக
முடிவுக்கு வந்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அதிபர்கள் தரத்திலுள்ளோருக்காக வகுக்கப்பட்டுள்ள புதிய இடமாற்றக் கொள்கை குறித்து புதன்கிழமை 06.09.2017 சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்த ஜெயராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தசாப்தங்களாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களுக்கும், அலுவலகங்களில் கடமையாற்றும் கல்வி நிருவாக அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்படாததால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்விப் பின்னடைவு ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

முன்னொரு காலத்தில் கல்வியில் கொடிகட்டிப் பறந்த வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்திருந்தமை எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

எனவே, கல்வி நிருவாகத்தில் சிறப்பான, ஆக்கபூர்வமான கொள்கை ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் காலமெல்லாம் வலியுறுத்தி வந்துள்ளது.

தசாப்தங்களாக ஒரே அதிபர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் பெற்றுச் செல்லும் வரையிலும் கூட ஒரே பாடசாலையில் கடமையாற்றி வந்துள்ளார்கள்.
கல்வி நிருவாக சேவையில் இது ஒரு வெளிப்படையான அநீதி என்ற விடயத்தை நாம் வெளிக்கொண்டுவந்திருந்தோம்.

தேசிய இடமாற்றக் கொள்கை அல்லது மாகாணத்திற்கென்றே தனித்துவமான இடமாற்றக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து கல்வி நிருவாக அதிகாரிகளுக்கும் அதிபர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படவேண்டும்.

அதன் மூலம் ஊழல், மோசடிகளைக் குறைக்கவும், துஷ்பிரயோகங்களை ஒழிக்கவும்‪  ஆளுமைகள், திறமைகள், வளங்கள், ஆக்கபூர்வச் செயற்பாடுகள் என்பனவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் வழியேற்படும்.

இந்த விடயத்தில் இடமாற்றத்திற்கான மாகாணத்திற்கென்று தனித்துவமான கொள்கையை முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான மாகாணசபை நிருவாகமும் மாகாணக் கல்வியமைச்சும் தற்போது வடிவமைத்துள்ளது.

அதன்மூலம் தற்போது பாடசாலை அதிபர்களிடமிருந்து இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைய எதிர்வருகின்ற ஜனவரியோடு அதிபர் இடமாற்ற முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விடும். அதன் பின்னர் கல்விச் செயற்பாடுகளும் கல்வி அபிவிருத்தியும் சீராக இடம்பெறும் என்று கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் எதிர்பார்க்கின்றது.

வருடத்தின் நடுப்பகுதியில் இடம்பெறும் முறையற்ற இடமாற்ற உத்தரவுகள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி அலுவலர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் பொருத்தமில்லாத காலப்பகுதியில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுவதை தமது சங்கம் ஆட்சேபித்தே வந்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: